சவூதி அரேபியாவில் பலத்த மழை!

Share this News:

தபூக் (05 பிப் 2021): சவுதி அரேபியாவின் மேற்கு மாகாணமான சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

மழையைத் தொடர்ந்து, தபூக்கின் பல்வேறு இடங்களில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பலத்த மழை காரணமாக அல் ஆலா-மதீனா சாலை மூடப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை வரை சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை முன்னறிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு மாகாணமான சவுதி அரேபியாவில் தபூக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.


Share this News:

Leave a Reply