குவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்!

Share this News:

குவைத் (30 அக் 2020): குவைத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் வீட்டு தனிமைப் படுத்தல் கால அவகாசம் 14 நாட்கள் என்பது தொடர்ந்து கடை பிடிக்கப்படும் என்று குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மஸ்ராம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் கோவிட் தடுப்பூசி விநியோகிப்பதற்கான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சர் டாக்டர். பாசலில் தெரிவிக்கையில் கோவிட் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை வழங்குவதில் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கோவிட் பாதுகாப்பில் முன்னணியில் இருப்பவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுவோருக்கு முன்னுரிமை அளிக்கும் என்றார்.

இந்தியா உட்பட 34 நாடுகளில் இருந்து நேரடி விமானங்களை அனுமதிக்கும் பிரச்சினை நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.


Share this News:

Leave a Reply