சவூதி அரேபியா ரியாத்தில் ஆடல் பாடலுடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

ரியாத் (02 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத் நகரில் ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கைகளின் வண்ணமயமான காட்சிகளுடன் ரியாத் நகரம் புத்தாண்டை வரவேற்றது.

ரியாத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் புத்தாண்டுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.

அரபு உலகின் முன்னணி பாடகர்களை ஒன்றிணைத்து, ரியாத் பவுல்வர்டில் நடைபெற்ற “ட்ரையோ நைட்” இசை நிகழ்ச்சியின் போது புத்தாண்டு கொண்டாடப் பட்டது.  இது சவூதி அரேபியாவின் மிக முக்கியமான புத்தாண்டு நிகழ்வாகவும் இருந்தது.

ஜார்ஜ் வாசுப் அபு வாடி, நஜாவா கரம், அசி அல்ஹலானி, லத்திஃபா, நான்சி அஜ்ராம், அங்கம், பஹா சுல்தான், நவல் அல்சாக்பி, வைல் கஃபௌரி, அப்துல்லா அல்மானி, வலீத் தவ்பிக், சபீர் அல்ரூபாய், அசலா மற்றும் அலிசா போன்ற அரபு நாடுகளைச் சேர்ந்த பாடகர்கள் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Boulevard முகமது அப்து திரையரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சவூதி அரேபியாவில் MAMZEL குழுவினர் நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்
சவூதி அரேபியாவில் MAMZEL குழுவினர் நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்

பவுல்வர்ட் சிட்டி மற்றும் பவுல்வர்டு வேர்ல்டு ஆகிய இடங்களில் புத்தாண்டைக் கொண்டாட ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் வந்திருந்தனர்.

புத்தாண்டு பிறந்தபோது பட்டாசுகள் வானில் வண்ணங்களைப் பரப்பின. அத்துடன், மக்களும் ஆரவாரம் செய்தனர்.

புத்தாண்டு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும் முன்கூட்டியே ஆன்லைனில் விற்றுத் தீர்ந்தன.

கடுமையான மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாக அறியப்பட்ட சவூதி அரேபியா, சமீப காலமாக மேற்கத்திய நாடுகளை விஞ்சும் வகையில் இசை, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply