மக்கா – மதீனா ஹரமைன் ரெயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

Share this News:

ஜித்தா (13 டிச 2021): மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையேயான ஹரமைன் அதிவேக இரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹரமைன் அதிவேக இரயில் சேவையில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தினமும் கூடுதலாக 16 சேவைகள் இயக்கப்படும் என்று இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரமைன் இரயில் சேவை மக்கா, ஜித்தா, ராபிக் மற்றும் மதீனா ஆகியவற்றிற்கு உண்டு. இதற்கிடையே ஜித்தாவின் சுலைமானியா நிலையத்திலிருந்து மக்காவிற்கு மேலும் எட்டு தினசரி சேவைகளும், மதீனாவிற்கு எட்டு கூடுதல் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சேவை மீண்டும் அதிகரிக்கப்படும் என்று ஹரமைன் அதி வேக இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

450 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் சேவை ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.. இந்த ரயில்கள் மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும் வசதியைக் கொண்டது.


Share this News:

Leave a Reply