துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

Share this News:

துபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது..

துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று விமான நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள், சுற்றுலா / வருகை விசாக்களில் துபாய்க்குச் செல்லும் இந்திய பயணிகளுக்கான பயண விதிமுறைகளை அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ளன..

இந்நிலையில் முறையாக விசா நடைமுறைகளை பின்பற்றாமல் மேலும் விசிட் விசாரவில் மற்றும் சுற்றுலா விசாவில் துபாய் வந்தவர்கள் திரும்பச் செல்லும் பயணச்சீட்டு இல்லாததாலும் இதர விதிமுறைகள் சரிவர பின்பற்றாததாலும் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply