துபாயில் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

Share this News:

துபாய் (14 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் வழக்குகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

கடந்த பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை. ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர்ஃபரீதா அல்-ஹுஸ்னி எச்சரித்துள்ளார்.

கடந்த பத்து நாட்களாக தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1600 க்கு கீழே வைக்கப்பட்டுள்ளது என்றும் இது கொரோனா தடுப்பூசி இடுவது அதிகரித்திருப்பதால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply