சவூதியில் இனி டிஜிட்டல் இக்காமாவை பயன்படுத்தும் வசதி!

Share this News:

ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம். இகாமாவை புதுப்பிக்க மூன்று நாட்களுக்கு மேல் தாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பாஸ்போர்ட் துறை கூறியுள்ளது

மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகளால் இகாமா கோரப்பட்டாலும், இந்த டிஜிட்டல் இகாமாவைக் காட்டினால் போதும். இகாமாவை புதுப்பித்த பிறகு, புதிய பிரிண்ட் எடுக்க ஜவாசத் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இகாமாவை புதுப்பிப்பதில் முதல் முறையாக 500 ரியாலும், மூன்று நாட்களுக்கு மேல் மீண்டும் மீண்டும் தாமதம் செய்தால் 1000 ரியாலும் அபராதம் விதிக்கப்படும். அப்சார் தளம் மூலம் இதை புதுப்பிப்பது முதலாளியின் பொறுப்பு என்றும் ஜவாசத் தெளிவுபடுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply