சவூதியில் இந்தியரை கொலை செய்த சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதியில் இந்தியரை கொலை செய்த, சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அமீர் அலி. இவர் சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஒரு வருடம் முன்பு அவரது சக தொழிலாளரான சவூதி நாட்டை சேர்ந்த ஃபுஆத் நூஹ் அப்துல்லாஹ் என்பவரால் படுகொலை செய்யப்படார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் முதல் சவூதி உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதனை அடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட சவூதி நாட்டவரான ஃபுஆத் நூஹ் அப்துல்லாஹ்வுக்கு மரண தண்டனை விதிக்கப்படது.

கொலையான அமீர் அலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரி குற்றவாளியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

மரணித்தவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்திருந்தால், குற்றவாளி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப் பட்டிருப்பார்.

ஆனால், அமீர் அலி குடும்பத்தினர் மன்னிப்பு அளிக்காத நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *