சவூதியில் பணிபுரியும் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்!

Share this News:

ரியாத் (08 மே 2021): சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும் என சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (HRSD) அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் ஒருபகுதியாகவும், அனைவருக்கும் ஆரோகியமான வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதெனில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும்..

இதனை நடைமுறைப்படுத்தும் நடைமுறை மற்றும் தேதியை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply