சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது.

ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா ஈயா சாலையில் வியாழக்கிழமை இரவு 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது

பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்து ஏற்படுவதற்குள் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply