ராமர் கோவிலைபோல் சீதாவுக்கு கோவில் – லோக் ஜனசக்தி பிரச்சாரம்!

Share this News:

பாட்னா (25 அக் 2020): பிகாரில் சீதா வுக்கு கோவில் கட்டப்படும் என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.வின் ராம் கோயில் பிரச்சாரத்தைப் போலவே, சீதாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் பிகாரில் சிறப்பு கோயில் கட்டப்படும் என்று சிராக் பாஸ்வான் கூறினார்.

சீதா தேவி இல்லாமல் ராமர் முழுமையடைய மாட்டார் என்று தெரிவித்த சிராக், பீகாரில் கட்டப்படும் சீதா கோயிலை அயோத்தியில் கட்டப்படவுள்ள ராம் கோயிலுடன் இணைக்கும் தாழ்வாரமும் கட்டப்படும் என்று கூறினார்.

1990 களில் பாபர் மசூதி தொடர்பாக எல்.கே. அத்வானி தலைமையிலான பாஜகவின் ரத யாத்திரை ராமர் கோவில் கட்டுவதையே ஒரு பெரிய தேர்தல் வாக்குறுதியாக கொண்டிருந்தது. மேலும் அந்த ரத யாத்திரையைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாத வன்முறையில் சுமார் 2,000 பேர் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply