ஐயோ அது நான் இல்லைங்க – வெங்கையா நாயுடு பல்டி!

Share this News:

புதுடெல்லி (16 ஜன2020): திருவள்ளுவர் காவி உடை அணிந்த புகைப்படத்தை பதிவேற்றியது அலுவலக ஊழியர் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து திருவள்ளுவர் தினமான இன்று, ”இந்தியாவின் துணை குடியரசு தலைவர்” என்ற டிவிட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் பகிரப்பட்டது.

இதனை தொடர்ந்து இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அப்பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, “முந்தைய திருவள்ளுவர் குறித்தான புகைப்படத்துடனான டிவிட்டை, தவறுதலாக அலுவலக ஊழியர் பதிவேற்றிவிட்டார். பின்பு அது கவனிக்கப்பட்டவுடன் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply