மத்திய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

Share this News:

புதுடெல்லி (01 பிப் 2022): ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

-ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

-இளைஞர்கள், பெண்கள் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்.

-சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில்துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

-சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

-4-00 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

-போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

-இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

-2023க்குள் 2ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்.

-எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உறபத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

-ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்

-கோதாவரி- பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 ந தி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

-ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

-அடுத்த நிதியாண்டில் 22ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

-1-12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதி.

-ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

-அடுத்த நிதியாண்டில் 22ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

-1-12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என உறுதி.

-சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை.

-நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு.

-ரூ.60 ஆயிரம் கோடியில் 18லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை.

-200 கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்படும்.

-டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும்.

-டிஜிட்டல் பல்கலைகழகங்கள் உருவாக்கப்படும்.

-பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

-வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை.

-கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

-வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.

-நவீன தொழில்நுட்பத்துடன் சிப்.

-பொருத்திய இ-பாஸபோர்ட் முறை அறிமுகப்பட்டுத்தப்படும்.

-மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக்கொள்வது தொடர்பான திட்டம் -கொண்டுவரப்படும்.

-நில ஆவணங்களை மின்னணு முறையில் அவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

-ஒரேநாடு ஒரே பதிவுமுறை கொண்டுவர திட்டம்.

-நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

-2023ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

-75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் ஏற்படுத்தப்படும்.

-நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு ஒரே பதிவு முறை கொண்டுவரப்படும்.

-2025ம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும்.

-பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாடங்களில் 68% உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை.

-பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை தொடங்கப்படும்.

-அரசின் மூலதன செலவினங்களுக்காக ரூ.7.5லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

-வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-2030ம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்.

-டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வாங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவிப்பு.

-மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.

-மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

-திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

-கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

-மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் என அறிவிப்பு.

-பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்.

-வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5%ஆக குறைப்பு.

-மொபைல், சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை.

-மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

-தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடர்கிறது.


Share this News:

Leave a Reply