அர்ணாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக ஸ்பைஸ் ஜெட் விமானம் பகீர் முடிவு!

மும்பை (29 ஜன 2020): அர்ணாப் கோஸ்வாமியை விமானத்தில் கேள்வி கேட்டதற்காக பிரபல பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ராவுக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கம்ராவுக்கு தடை விதித்துள்ளது.

டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனக் கேள்வி எழுப்புகிறார். எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை.

மேலும் பேசியுள்ள அவர், “நான் இதை ரோஹித் வெமுலாவிற்காகச் செய்கிறேன். ரோஹித் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை வாசிக்க நேரம் தேடுங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது இதயம் இருந்தால் இதைச் செய்யலாம்.” எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை அர்ணாபை தகாத வார்த்தைகளாலும் பேசியதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்திற்காக இண்டிகோ விமானம் குணால் கம்ராவுக்கு 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

இது இப்படியிருக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் அடுத்த அறிவிப்பு வரும் வரை குணால் கம்ரா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply