பொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்!

Share this News:

புதுடெல்லி (18 செப் 2020): பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரெயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது:-

முக்கிய ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம்.

ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்த கட்டணம் மிக குறைந்த அளவில் இருக்கும். பயணிகளை பாதிக்கிற வகையில் இருக்காது. உலகத் தரமான வசதிகளை ரெயில்வே கொடுப்பதற்கு இது பயன் உள்ளதாக அமையும்.

இந்தியன் ரெயில்வே துறையில் 7 ஆயிரம் ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் 10 முதல் 15 சதவீத ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில் கட்டண உயர்வு பொதுமக்களை நசுக்கும் அடுத்த நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.


Share this News:

Leave a Reply