டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி!

Share this News:

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் தொடர்வதால் அங்கு பல்வேறு சேவைகள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரிலிருந்து நிறைய நோயாளிகளின் தரவுகளை எடுத்து அதனை டார்க் வெப் இணையத்திற்கு ஹேக்கர்கள் விற்பனை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஏராளமான அரசியல்வாதிகளின் மருத்துவ சிகிச்சை தரவுகளும் கசிந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. டெல்லி சைபர் க்ரைம், எய்ம்ஸ் நிர்வாகமும் இணைந்து சர்வரை மீண்டும் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயல்வதாகத் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply