ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு!

Sanjay Rawath
Share this News:

புதுடெல்லி (14 நவ 2020): ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் விமர்சனத்திற்கு சிவசேனா ஒபாமாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர் எழுதியுள்ள புத்தகத்தில் ராகுல் காந்தி குறித்து பாடங்களை சரியாக படிக்காத மாணவர் என்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ஒரு ஆசிரியருக்கு முன்னால் தான் எல்லாம் தெரிந்ததை போன்று பாசாங்கு செய்ய முயற்சிக்கும் மாணவனைப் போன்றவர் என்று பராக் ஒபாமா கூறியிருந்தார்.

ஒபாமாவின் இந்த கருத்திற்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் ட்ரம்ப் குறித்து விமர்சனம் செய்துள்ளோமா? இந்திய அரசியல் குறித்து ஒபாமாவிற்கு என்ன தெரியும்? என்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply