திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

Share this News:

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

“கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும் பலர் கேட்கிறார்கள் என்றும் ராவத் அதில் கூறியுள்ளார்.

மேலும் அந்தக் கட்டுரையில், கோவாவின் தற்போதைய நிலவரத்தைக் காரணம் காட்டி அனைத்து கட்சிகளும் அந்த மாநிலத்தை அரசியல் ஆய்வகமாக மாற்றிவிட்டன. சென்ற தேர்தலில் 17 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளதாகவும், தற்போது வெறும் 2 இடங்களுக்கு மட்டும் தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவாவில் ஆளும் பாஜக வெற்றி பெறுவது எளிதல்ல என்றும், ஆம் ஆத்மி மற்றும் டிஎம்சி வெற்றி பெறுவது எளிதல்ல என்றும், பாஜகவுக்கு உதவுவதற்காக காங்கிரஸின் வெற்றிப் பாதையை பிற கட்சிகள் தடுக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், கோவா பார்வர்ட் கட்சி (ஜிஎஃப்பி), மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி (எம்ஜிபி), ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) மற்றும் என்சிபி ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன.


Share this News:

Leave a Reply