சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த அமித்ஷா உத்தரவு!

புதுடெல்லி (14 நவ 2022): ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 100 சட்டவிரோத குடியேறிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, முடிந்தால் அவர்களைக் கைது செய்து நாடு கடத்துமாறு அதிகாரிகளுக்கு ஷா பணித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற உளவுத்துறைக் கூட்டத்தில் அமித்ஷாவின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எல்லையோர மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் தீவிரமயமாக்கல் குறித்து கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமித் ஷா முன்பு அழைப்பு விடுத்துள்ளார். மாநில காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்ட உளவுத்துறை தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாட்டில் அமித் ஷா ஆகஸ்ட் மாதம் இதை அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கையை ஐபி சமர்ப்பித்தது.

எல்லைப் பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதாக, உத்தரப்பிரதேச காவல்துறை ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. 2021 நவம்பர் 19 முதல் 21 வரை நடைபெற்ற வருடாந்திர காவல்துறை இயக்குநர் மாநாட்டில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் மசூதிகள் மற்றும் மத்ரஸாக்களின் கணிசமான அதிகரிப்பு, எல்லையின் இருபுறமும் மக்கள்தொகை மாற்றங்கள் காரணமாக இருப்பதாகவும் அது கூறுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயங்கரவாதம், பயங்கரவாத அச்சுறுத்தல், சைபர் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு போன்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஷா விரிவாக விவாதித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply