பாபர் மசூதிக்கு ரதயாத்திரைக்கு அனுமதித்த வழக்கு முடித்து வைப்பு!

புதுடெல்லி (30 ஆக 2022): பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மறைந்த உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மீதான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு ரத்த யாத்திரைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக அப்போதைய உபி முதல்வர் கல்யாண் சிங்குக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கல்யாண் சிங் மரணத்தை கரணம் காட்டி அதேபோல மனுதாரரின் மரணத்தையும் கரணம் கட்டி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை பாபர் மசூதி இடிப்பு தொடர்பான மற்ற வழக்குகளை இந்த உத்தரவு பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply