மோடி அமித்ஷாவுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜ்நாத் சிங்!

Share this News:

மீரட் (23 ஜன 2020): இந்திய முஸ்லிம்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மீரட்டில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது யாராக இருந்தாலும் சரியே என்றார்.

மேலும் குடியுரிமை சட்டம் எதிர்கட்சிகளால் சிறுபான்மையினருக்கு எதிரானதுபோல் திசை திருப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பொதுமக்களை மிரட்டும் வகையில் பேசி வரும் நிலையில் ராஜ்நாத் சிங்கின் பேச்சு, மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு எதிராக காய் நகர்த்தல் என்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


Share this News:

Leave a Reply