இந்திரா காந்தியின் முடிவு தவறானது – ராகுல் காந்தி பகீர் கருத்து!

Sonia Rahul
Share this News:

புதுடெல்லி (03 மார்ச் 2021): “2014 ல் இருந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் போராடுவது அதிகாரத்திற்காக அல்ல நாட்டை பாதுகாப்பதற்காக” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ,”இப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. 2014 க்குப் பிறகு, காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன அவை அதிகாரத்திற்காக அல்ல, நாட்டிற்காகவும் நாடு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் போராடுகின்றன.” என்றார்

1975 ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரகால நிலையை அறிவித்தது தவறான முடிவு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அதேவேளை ஆனால் அப்போது நிலைமை வேறுபட்டது. நாட்டின் எனினும் அவர் நாட்டை தன கட்டுக்குள் வைத்திருக்கவில்லை காங்கிரஸ் அதனை அனுமதித்ததும் இல்லை. என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயக தேர்தல் முக்கியமானது என்று நான்தான் முதலில் கூறினேன் என்றும் அவர் தெரிவித்தார். 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியைமுழுமையாக மாற்றியமைக்க வேண்டும், நிரந்தர தலைமை மற்றும் கட்சிக்குள்ளேயே தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நேரத்தில் ராகுலின் கருத்துக்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply