பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (26 ஏப் 2022): பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவர் காங்கிரசில் இணைய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரசாந்த் கிஷோருடனான நீண்ட ஆலோசனைக்கு பிறகு, அதிகாரம்மிக்க குழு ஒன்றை அமைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அக்குழுவின் ஒரு பகுதியாக கட்சியில் சேர அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில், கட்சியில் இணைய வேண்டும் என்ற காங்கிரசின் மிகச்சிறந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். எனது தாழ்மையான கருத்துப்படி, கட்சிக்கு என்னை விட, சீர்திருத்தங்கள் மூலம் ஆழமாக வேரூன்றியுள்ள உள்கட்டமைப்பு பிரச்னைகளை தீர்க்கும் தலைமை மற்றும் ஒட்டுமொத்தமான பொறுப்பு தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply