பாபர் மசூதி தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Share this News:

புதுடெல்லி (08 மார்ச் 2020): பாபர் மசூதி – ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாபர் மசூதி கட்ட வேறு இடத்தில் இடம் ஒதுக்க உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தின் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply