ஷர்ஜீல் இமாம் சிறையில் தொலைத்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? – ப.சிதம்பரம் கேள்வி!

Share this News:

புதுடெல்லி (05 பிப் 2023): ஷர்ஜீல் இமாம் மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இழந்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஷர்ஜீல் இமாம் மற்றும் 10 பேர் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் இது தொடர்பான வழக்கில் ஷர்ஜீல் இமாம் மற்றும் 10 பேர் பலிகடா ஆக்கப்பட்டதாக டெல்லி விசாரணை நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாராட்டியுள்ள ப.சிதம்பரம், “ஷர்ஜீல் இமாமும் அவரது நண்பர்களும், சிறையில் தொலைத்த நாட்களை யார் திரும்பக் கொடுப்பார்கள். அரசியலமைப்புக்கு எதிரான இந்த பழிவாங்கல் நிறுத்தப்பட வேண்டும்.” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் ஷர்ஜீல் உள்ளிட்ட நிரபராதிகளை பலிகடா ஆக்கியுள்ளது டெல்லி காவல்துறை. என கூறியுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த குற்றத்திற்கு முதன்மையான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து சட்டத்தை அவமதிக்கும் செயலுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply