சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி – அசாதுத்தின் உவைஸி கட்சி மறுப்பு!

Share this News:

லக்னோ (25 ஜூலை 2021): எதிர்வரும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியான செய்திகளை எய்ஐஎம் மறுத்துள்ளது. கட்சியின் உபி மாநிலத் தலைவர் சவுக்கத் அலி இதனை தெறிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் எய்ஐஎம் கூட்டணி வைப்பதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது.

“சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் அகிலேஷ் யாத, வ் முஸ்லிம் தலைவரை துணை முதல்வராக்குவார் என்ற புரிதலின் பேரில் நாங்கள் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்போம்.” என்று AIMIM கூறியதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் கட்சித் தலைவரோ, உவைஸியோ அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடவில்லை, என்று சவுக்கத் அலி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 110 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றியை நிர்ணயிப்பது முஸ்லிம்களின் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply