பிரதமர் மோடிக்கு உவைஸி சவால்!

Share this News:

ஐதராபாத் (26 நவ 2020): ஐதராபாத் தேர்தலில் உங்கள் பிரச்சாரம் எடுபடுமா? என்று பிரதமர் மோடிக்கு அஸாதுத்தின் உவைஸி சவால் விட்டுள்ளார்.

ஐதராபாத்தில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரத்திற்காக ஐதராபாத்திற்கு . பிரதமரை அழைத்து வராமல் ஏன் மற்றவர்களை அழைத்து வருகிறீர்கள்? என பாஜகவுக்கும் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர்களில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பெங்களூர் தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அடங்குவர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வரும் நாட்களில் வர வாய்ப்புள்ளது.

ஹைதராபாத் வெள்ளத்தால் பேரழிவிற்குள்ளானபோது கூட அவர்கள் யாரும் வரவில்லை என்றும் உவைஸி குற்றம் சாட்டினார். மேலும் ஐதராபாத்திற்கு வரும் பாஜக தலைவர்களிடம் வெறுங்கையுடன் வர வேண்டாம் என்றும் 1,350 கோடி ரூபாய் நிதி உதவியைக் கொண்டு வர வேண்டும் என்றும் உவைஸி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே கடந்த ஆறு ஆண்டுகளாக ஹைதராபாத்தில் அமைதி நிலவுகிறது. எந்தவொரு இனவாத மோதலும் இல்லை. ஆனால் பாஜகவிநர் மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்க வருகிறார்கள். இதுபோன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் கேட்டுக்கொண்டார்.

தேர்தலுக்கு முன்னதாக சிலர் சதித்திட்டங்கள் மற்றும் போலி செய்திகளை பரப்புவதன் மூலம் அரசியல் ஆதாயங்களை அடைய முயற்சிக்கின்றனர் என்று முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.


Share this News:

Leave a Reply