கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய அமித் ஷா – வீடியோ!

Share this News:

லக்னோ (28 ஜன 2022): உத்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி, பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா வழிகாட்டல்முறைகள் எதனையும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்குள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தாத்ரி, கவுதம் புத்த நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷாவை சுற்றி மக்கள் நின்று கொண்டிருக்க, அமித் ஷாவோ மற்ற யாருமோ கொரோனா வழிகாட்டல் வழிமுறைகளை பின்பற்றவில்லை. யாரிடமும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை.

இவ்விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply