மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல்!

Share this News:

மும்பை (03 ஜூன் 2020): மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிராவில் கரையைக் கடந்தது.

அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்பட்டது. இது இன்று பிற்பகல் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் மகாராஷ்டிராவில் ரையக் கடந்தது.

புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் ‘நிகர்சா’ என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த நிசர்கா புயலானது தற்பொழுது அலிபாக் அருகே மணிக்கு 100-110 கி.மி. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலான நிசர்கா தற்பொழுது புயலாக வலுவிழந்தது. மேலும், 23 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.


Share this News: