நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தூக்கு!

Share this News:

புதுடெல்லி (17 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுவதற்கான தேதியை வெளியிட்டு, புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம்.

ஏற்கனவே இரண்டு முறை தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 3வது முறையாக புதிய தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply