பாஜக தலைவர்கள் கனடா நாட்டிற்குள் நுழைய தடை?

Share this News:

டொரோண்டோ (02 செப் 2022): பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பல முக்கிய தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை கண்டித்து அவர்கள் கனடாவில் காலடி வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) கனடா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மேலும் இந்தியாவை பிரத்யேக இந்து நாடாக மறுவடிவமைப்பதற்காக இந்துத்வா சித்தாந்தத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக NCCM வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் NCCM கனட அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை அடங்கிய பட்டியலில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் முகமது நபியைப் பற்றி “நகைச்சுவை வீடியோ” மூலம் அவதூறான கருத்துக்களைக் கூறிய தெலுங்கானாவைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜா சிங் ஆகியோர் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

பீகார் பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், டெல்லி பாஜக பிரிவு தலைவர் அஷ்வினி உபாத்யாய், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், எம். பஞ்சாக்சார்யா ரேணுகாச்சார்யா (கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளர்), மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் , பாஜக டெல்லி தலைவர் கபில் மிஸ்ரா, ஹரியானா பாஜக செய்தித் தொடர்பாளர் சூரஜ் பால் அமு, உபி பாஜக எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், உபி எம்எல்ஏ ரகுராஜ் சிங் ஆகியோரும் NCCM வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு காஷ்மீரில் நடைபெற உள்ள 2022 ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறும் கனடா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள NCCM, கனடா அரசு, சர்வதேச மனித உரிமைகளுக்காக நிற்க வேண்டும்” என்று NCCM கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply