முஸ்லிம்கள்தான் எங்களுக்கு உதவினார்கள் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மக்கள்!

Share this News:

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடகாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியபோது, ​​தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்நகருக்கு அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. அங்கு களத்தில் இறங்கிய முஸ்லீம் தன்னார்வலர்கள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுடன் உதவி வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் நாங்கள் ஒட்டுப் போட்ட தலைவர்கள் இறந்துவிட்டோமா அல்லது உயிருடன் இருக்கிறோமா என்று கூட பார்க்க வரவில்லை. அதிகாரிகளும் எங்களை கவனிக்கவில்லை. முஸ்லிம்களாகிய நீங்கள் எங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கிறீர்கள். என்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லீம் அமைப்புகள் தலைமையில் தொண்டர்கள் உதவியோடு உதவி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply