ஹிஜாப் மத அடிப்படையில் அவசியமில்லையா? – உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு!

Share this News:

புதுடெல்லி (15 மார்ச் 2022): ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி முஸ்லிம் மாணவிகள் நிபா நாஸ் மற்றும் மணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இருவர் சார்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்த மனுவில், மத சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்குவதில் உயர்நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாக மனுதாரர்கள் மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது, மேலும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மனசாட்சிக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் ஊகித்துள்ளது. என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் ஹிஜாப் அணிவதால் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படுகிறது என்பதை உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மனசாட்சிக்கான உரிமை அடிப்படையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ‘மத அடிப்படையில் அவசியமில்லை என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று கர்நாடக உயர் நீதிமன்றம்.முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply