கொரோனா என்னை தாக்காது – மாஸ்க் அணியாத அமைச்சர் தரும் விளக்கம்!

Share this News:

போபால் (12 ஜன 2022): மத்தியப் பிரதேச அமைச்சரும் பாஜக தலைவருமான உஷா தாக்கூர், கொரோனா என்னை தாக்காது என்று கூறிக் கொண்டு மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் உலா வருகிறார்.

இந்தியாவில் அதி வேகத்தில் கொரோனா பரவி வருகிறது . இந்நிலையில் மத்திய பிரதேச சுகாதரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக அக்னிஹோத்ர பூஜை செய்து வருவதாகவும் கொரோனா என்னை தாக்கது என்பதாகவும் கூறி மாஸ்க் அணியாமல் உலா வருகிறார்.

இதுகுறித்து உஷா தாக்கூர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முகமூடி அணியாமல் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றேன். “கடந்த 30 ஆண்டுகளாக, நான் தினமும் சூரிய உதயத்தில் அக்னிஹோத்ர பூஜை செய்து வருகிறேன். இது எனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது காற்றை சுத்தப்படுத்த உதவுகிறது, அதனால் நான் எந்த வைரஸாலும் பாதிக்கப்படவில்லை,” என்று உஷா தாக்கூர் கூறினார்.

கடந்த ஆண்டு, உஷா தாக்கூர், வேதகால வாழ்க்கை முறையைப் பின்பற்றி, சாணத்தால் ஹவா பூஜை செய்து 12 மணி நேரம் வீட்டை சுத்தப்படுத்தினால், கொரோனாவை விரட்டியடிக்க முடியும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply