பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்!

ஐதராபாத் (27 அக் 2020): தெலுங்கானா மாநிலம் துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ .18.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

.பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் உறவினர் சுராபி அஞ்சன் ராவின் வீட்டில் இருந்து சித்திப்பேட்டை போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றபோது போலீசாரை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அப்போது அந்த பணத்தில் ரூ .12 லட்சத்தையும் பாஜகவினர் எடுத்துச் சென்றதாகவும், மீதமுள்ள ரூ .5,87,000 லட்சபோலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சித்திப்பேட்டை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெரிவித்தார்.

போலீசார் சுமார் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply