சமூக வலைதளங்களிலிருந்து மோடி விலகல் – திடீர் அறிவிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

உலகின் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட மோடி எதற்காக சமூகதளத் தொடர்புகளைக் கைவிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தார்மீகப் பொறுப்பேற்று விலகுவதை சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக எடுத்துக்கொண்டாரோ என்று நெட்டிசன்கள் பகடி செய்கின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply