இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!

Share this News:

புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.

இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன.

சிறுபான்மை விவகார அமைச்சின் தரவுகளின்படி, 2017-18 மற்றும் 2022-23 (ஜனவரி 31 வரை) அனைத்து சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின்கள் மற்றும் பௌத்தர்கள் தொடர்பாக மொத்தம் 10,562 புகார்கள் கிடைத்துள்ளன.

இதில் 7,508 முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் உரியது. இது அனைத்து சிறுபான்மை சமூகங்களிடமிருந்து சிறுபான்மையினர் குழுவிற்கு கிடைத்த மொத்த புகார்களில் 71 சதவீதமாகும்.

ஆளும் பாஜக அரசில், இந்திய சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற, அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுவது ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply