கோவில்,மசூதி,தேவாலயம் ஆகியவை இணைந்ததே திரிணாமூல் காங்கிரஸ் – மம்தா விளக்கம்!

Mamta-Banerjee
Share this News:

பனாஜி (13 டிச 2021): கோவில்,மசூதி,தேவாலயம் ஆகியவை இணைந்ததே TMC (திரிணாமூல் காங்கிரஸ்) என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றுள்ள மம்தா, கோவாவின் பனாஜி நகரில், கட்சி தொண்டர்களிடம் பேசியபோது, “டிஎம்சி என்றால் ‘கோயில்-மசூதி-தேவாலயம்’ Temple, Mosque, church என்று அர்த்தம். நாங்கள் பாஜகவுடன் போராடுகிறோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், பின்வாங்காதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள், ”

“நாங்கள் வாக்குகளைப் பிரிப்பதற்காக இங்கு வரவில்லை, மாறாக வாக்குகளை ஒன்றிணைத்து திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் சண்டையிட்டு சாவோம் ஆனால் பின்வாங்க மாட்டோம், ”என்று அவர் கூறினார்.

கோவாவில் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் வரவிருக்கும்  தேர்தலுக்கான பிரச்சாரத்தை டிஎம்சி கட்சி தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

கோவா சட்டமன்றத்தில் 40 உறுப்பினர்களின் பலம் உள்ளது, அதில் பாஜக தற்போது 17 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்டு ஆட்சியில் உள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியில் 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனினும் ஆதரவில்லாததால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.


Share this News:

Leave a Reply