அதிர்ச்சி அடைய வைத்துள்ள சமையல் சிலிண்டர் விலை உயர்வு – இன்று மட்டும் இவ்வளவு விலை உயர்வா?

Share this News:

புதுடெல்லி (01 நவ 2021): வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரே நாளில் 235 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக ரீதியிலான பயநோட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.265 உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,133 ஆக இருந்தது.

அதேபோல கேரளாவில் சிலிண்டரின் விலை ரூ.1994. அதே சமயம் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. நாட்டில் எரிபொருட்களின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதேபோல பெட்ரோல், டீசல் விலை தலா 48 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply