இந்து கடவுள்களை கேலி செய்தேனா? – காமெடி நடிகர் சவால்!

Share this News:

புதுடெல்லி (11 செப் 2022): இந்து கடவுள்களை கேலி செய்ததை நிரூபிக்குமாறு விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சவால் விடுத்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி குருகிராமில் நடைபெறவிருந்த நிலையில், குணால் இந்துக்களை இழிவுபடுத்துவதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை குருகிராம் நிர்வாகத்திடம் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு வெள்ளிக்கிழமை புகார் அளித்தன. இதையடுத்து, செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஸ்டுடியோ சா பாரில் நடைபெறவிருந்த கம்ராவின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் இந்துக் கடவுள்களைக் கேலி செய்ததாகக் கூறப்படும் ஆதாரங்களை காட்ட முடியுமா? என்று விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் “கடவுளுடனான எனது உறவை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். மேலும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தங்களை இந்தியர்களாகக் கருதினால், மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Share this News:

Leave a Reply