முதலில் பாஜக பின்பு காங்கிரஸ் இப்போ எந்த கட்சி தெரியுமா? – கட்சிகளை சுற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Share this News:

புதுடெல்லி (23 நவ 2021): முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் மம்தா கட்சியில் இணைகிறார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கீர்த்தி ஆசாத் அரசியலுக்குள் நுழைந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். 1999, 2009, 2014 ஆகிய 3 முறை அவர் எம்.பி.யாக இருந்தார்.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி ஆசாத் பா.ஜனதாவில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டை கூறினார். இதனால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இணைந்தார்.

இந்த நிலையில் கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் மம்தா முன்னிலையில் அந்த கட்சியில் சேருகிறார்.

இதையும் படியுங்கள்… நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கிரசில் நாளை முதல் விருப்ப மனு- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு


Share this News:

Leave a Reply