மிகவும் எளிமையாக நடந்த கேரள முதல்வர் மகள் – முஹம்மது ரியாஸ் திருமணம்!

Share this News:

திருவனந்தபுரம் (15 ஜூன் 2020): கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா முஹம்மது ரியாஸ் என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

தைக்கண்டியேல், மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸை இன்று மறுமணம் செய்து கொண்டார்.

திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் வீணா. அதேபோல மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இந்நிலையில் பிணராயி விஜயன் வீட்டில் வைத்து இன்று நடைபெற்ற இந்த எளிமையான திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டது. மணமகன் ரியாஸ் மணமகள் வீனாவுக்கு . தாலி கட்டிய பிறகு திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இந்த திருமணத்தில் முஹம்மது ரியாஸின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


Share this News: