‘முஸ்லிமா – உயர்ஜாதி அல்லாத சமூகமா..? அப்போ வேலை கிடையாது..!’

Raeesa Ansari
Share this News:

இந்தூர் (24/07/2020):மத்திய பிரதேசத்தின் இந்தூரில் காய்கறி விற்பனையாளர் ரைசா அன்சாரி நகராட்சி நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பொருள் அறிவியலில் பி.எச்.டி பெற்றதாக ரைசா அன்சாரி கூறுகிறார்.

Raeesa Ansari 1
Raeesa Ansari 1

இந்தூரில் உள்ள நகராட்சி அதிகாரிகள் காய்கறி விற்பனையாளர்களை துன்புறுத்துவதாகவும், அவர்கள் வியாபாரத்தை சுமுகமாக நடத்த அனுமதிக்கவில்லை என்றும் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.

பொருள் அறிவியல் பிரிவில் பிஎச்.டி. படித்த நீங்கள் ஏன் காய்கறி விற்கிறீர்கள்? என்று அவரிடம் வினவிய என்.டி.டி.வி.- இடம் அவர், ‘எந்த நிறுவனங்களும், எந்த கல்லூரிகளும் முஸ்லிம்களுக்கோ அல்லது பிற சமூகங்களின் உறுப்பினர்களுக்கோ வேலை கொடுக்கத் தயாராக இல்லை’ என்று கூறினார்.

இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விஷ்வ வித்யாலயா-விலிருந்து மார்ச் 2011-இல் பிஎச்டி முடித்ததாக அன்சாரி கூறினார்.

படித்தவர்களுக்குரிய மரியாதை உலகெங்கும் சாதி-மத-இன-மொழி கடந்து விரிந்து கொண்டிருக்க மேல்தட்டு வளர் நாட என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா-வில் ஜார்ஜ்-களின் உயிர்களுக்கும், பன்முகை பண்பாடு கொண்ட இந்தியாவில் அத்துடன் இணைந்து ரைசா-க்களின் தகுதிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்து மனித சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று!
– ஒளியான்

பேட்டி


Share this News:

Leave a Reply