இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து எதிரொலி – நியூசிலாந்தில் இந்திய தலைவர் அதிரடி நீக்கம்!

Share this News:

புதுடெல்லி (16 மே 2020): இஸ்லாத்திற்கு எதிராக சமூக வலைதலங்களில் கருத்து தெரிவித்த இந்தியர், காந்திலால் பகபாய் படேல் என்பவரை வெலிங்டன் புகழ் பெற்ற நீதி மற்றும் அமைதி சங்கம் (Wellington Justice of Peace Association ), அச்சங்கத்தின் அனைத்து பதவியகளிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் அரபு நாடுகளின் இந்திய தூதரகங்களும் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் பதிவுகள் இடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

இந்நிலையில் காந்திலால் பகபாய் படேல் என்ற இந்தியர், நியூசிலாந்தின் Wellington Justice of Peace Association என்ற புகழ் பெற்ற சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் சமூக வலைதலங்களில் இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களை பதிந்து வந்துள்ளார். இது நீதி மற்றும் அமைதி சங்கத்தின் மேலதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது.

இதனை முழுமையாக விசாரித்த சங்க நிர்வாகிகள் படேலை அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வ்நத அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்ததோடு, இவ்விவகாரத்தை அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளனர். மேலும் நீதி அமைச்சகம் அவர் மீதான நடவடிக்கயை ஆலோசிக்க வேண்டியும் கேட்டுக் கொண்டுள்ளது.

பட்டேல் நியூசிலாந்தின் பல்வேறு பெருமை மிக்க விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களால் இந்தியர்கள் உலக அளவில் மதிப்பிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News: