ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கக் கோரி மலேசியாவுக்கு இந்தியா கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (15 மே 2020): ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி மலேசியாவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் கடந்த மூன்று வருடங்களாக மலேசியாவில் வசித்து வருகிறார். டாக்காவில் கடந்த் அ2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவு செய்துள்ள நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி. இந்திய அரசு முறையாக கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் மோடி அப்போதைய மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மதுவிடம் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கக் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோக்லேவும் உடனிருந்தார்.

இந்நிலையில் இந்தியா முறையாக தற்போது மலேசியாவிடம் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளது.


Share this News: