டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களுக்கு இந்துத்வா அமைப்பு மீண்டும் மிரட்டல்!

shaheen-bagh
Share this News:

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த இந்து சேனா இந்துத்வா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பூட்டும் பேச்சும், மூன்று நாட்கள் அவகாசத்தில் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்துவோம் என போலீசுக்கே விட்ட சவாலும்தான். எனினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை பாயவில்லை.

இது இப்படியிருக்க ஷஹீன் பாக் அமைதி வழி தொடர் போராட்டம் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசும், இந்துத்வா அமைப்புகளும் பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் இந்து சேனா என்ற இந்துத்வா அமைப்பு தற்போது ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பகிரங்க போஸ்டர் ஒன்றின் மூலம் விடுக்கப் பட்டுள்ள அழைப்பு டெல்லியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply