முஸ்லிம்களுக்கு எதிரான கீழ்த்தரமான பேச்சு – கேட்டு ரசித்துக்கொண்டிருந்த போலீஸ்!

Share this News:

புதுடெல்லி (10 ஜூலை 2021): ஹரியானாவில் பாஜக செய்தித் தொடர்பாளரும் கர்னேசேனா தலைவருமான சூரஜ் பால் அமு முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காதது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் பட்டோடியில் உள்ள மகாபஞ்சாயத்தில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், கிராமத் தலைவர்கள் மற்றும் பல்வேறு கோராக்ஷா குழுக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

கூட்டத்தில் ஹரியானா பாஜக செய்தித் தொடர்பாளரும், கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமு வெறுக்கத்தக்க உரை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மதம், லவ் ஜிஹாத் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இங்கு சூரஜ் பால் அமு குறிப்பாக முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கிப் பேசியுள்ளார்.

அமுவின் உரையை சுமார் 100 போலீசார் அங்கிருந்து கேட்டுள்ளனர். ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் பாயவில்லை என கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply