ஞானவாபி மசூதி விவகாரம் குறித்த தீர்ப்பு – இந்து பெண் மனுதாரர் நடனமாடி கொண்டாட்டம்!

Share this News:

வாரணாசி (12 செப் 2022): ஞானவாபி வழக்கில் இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உறுதி செய்த வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மனுதாரர்காளில் ஒருவர் நடனமாடி கொண்டாடியுள்ளார்.

நடனமாடினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் மஞ்சு வியாஸ், இந்து சகோதர சகோதரிகள் இன்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் தினசரி வழிபாடு நடத்த அனுமதி கோரி ஐந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்கக்கூடாது என்ற மசூதி கமிட்டியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மனுதாரர்களில் ஒருவரான மஞ்சு வியாஸ், “இந்தியா இன்று மகிழ்ச்சி அடைகிறது. எனது இந்து சகோதர சகோதரிகள் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்”. என்றார்.

மஞ்சு வியாஸ் தவிர, லட்சுமி தேவி, சீதா சாஹு, ராக்கி சிங் மற்றும் ரேகா பதக் ஆகியோர் மற்ற மனுதாரர்களாவர்


Share this News:

Leave a Reply