பாஜகவுக்கு எதிரான அலை – காங்கிரஸ், திரிணாமூல் கூட்டணிக்கு வாய்ப்பு!

Share this News:

கோவா (13 ஜன 2022): கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அலை தோன்றியுள்ளது.

கோவாவில் பாஜக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஊழல் என பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்கும் சக்தி எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை.

ஆட்சிக்கு எதிரான கருத்து சாதகமாக இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது. மாநிலத்தில் 40 சதவீத சிறுபான்மை வாக்குகள் உள்ள 12 தொகுதிகளும், 25 சதவீத சிறுபான்மை வாக்குகள் உள்ள 7 தொகுதிகளும் உள்ளன. இதை காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி கட்சிகள் குறிவைத்தால் சிறுபான்மை வாக்குகள் சிதறும் என பாஜக நம்புகிறது.

காங்கிரஸின் பெண் தலைவர் பிரதிமா குட்டினோ ஆம் ஆத்மி கட்சியிலும், மூத்த தலைவரான ரவிநாயக் பா.ஜ.க.விலும் இணைந்ததால் காங்கிரஸுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலகியிருப்பது காங்கிரசுக்கு தலைவலியாக உள்ளது. புதிய தலைவர்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மெதுவாக செயல்படும் திரிணாமுல் காங்கிரஸ் பெண்களின் கணக்கில் மாதம் ரூ.500 டெபாசிட் செய்வதாக உறுதியளிக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க திரிணாமுல் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


Share this News:

Leave a Reply