பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக 4 எஸ்டிபிஐயினர் கைது!

Share this News:

ஆலப்புழா (21 டிச 2021): கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பைக்கையும் காவல்துறையினர் கைப்பற்றினர். சரியான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே, ஆலப்புழா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் அறிவிக்கப்பட்டத் தடை உத்தரவு டிசம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, வரும் 22ம் தேதி காலை 6 மணி வரை இந்தத் தடை நீடிக்கும். மாவட்டத்தில் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply